மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்

 

10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்

வகுப்பு 10 -தமிழ் 

அலகு 2

 வினா -ஒரு மதிப்பெண்

பலவுள் தெரிவு


1.      உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”  – பாரதியின்  இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம், எதுகை                  

ஆ) மோனை, எதுகை

இ) முரண், இயைபு                       

  ஈ) உவமை, எதுகை             

விடை: மோனை, எதுகை

2.      செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2: காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

அ) செய்தி 1 மட்டும் சரி             

ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி            

ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

விடை: ஈ) செய்தி 1, 3  ஆகியன சரி

3.      ‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்                 

ஆ) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல்நீர் ஒலித்தல்                                                  

ஈ) கடல்நீர் கொந்தளித்தல்        

விடை: அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

4.      ‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை                      

ஆ) உவமைத்தொகை

இ) அன்மொழித்தொகை         

ஈ) உம்மைத்தொகை          

விடை: அ) பண்புத்தொகை    

5.      பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்     – 1. மேற்கு

ஆ) கோடை            – 2. தெற்கு

இ) வாடை              – 3. கிழக்கு

ஈ) தென்றல்          – 4. வடக்கு

அ) 1, 2, 3, 4               

ஆ) 3, 1, 4, 2      

இ) 4, 3, 2, 1       

ஈ) 3, 4, 1, 2       

விடை: ஆ) 3, 1, 4, 2

அப்துல்கலாம் பொன்மொழி #abdulkalam #kalam

சனி, 16 நவம்பர், 2024

அலகு 4 - 10 வகுப்பு -தமிழ் - வினா -ஒரு மதிப்பெண்

 

 

அலகு 4 - 10 வகுப்பு -தமிழ் - 

 வினா -ஒரு மதிப்பெண்
அலகு 4

 வினா -ஒரு மதிப்பெண்
பலவுள் தெரிவு

பலவுள் தெரிக.  (பாடநூல் வினாக்கள்)

1.  ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி       

ஈ) நோயாளியிடம் மருத்துவர்           

விடை: ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

 

2.      பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா  

ஆ) சீலா    

இ) குலா    

ஈ) இலா   

விடை: ஈ) இலா

 

3.   பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்   

ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்    

ஈ) வானத்தையும் பேரொலியையும்            

விடை:     ஈ) வானத்தையும் பேரொலியையும்

 

4.   தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத்

திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச்

சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.          

விடை: அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

 

5.    குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே _____________

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி      

விடை:     பால் வழுவமைதி, திணை வழுவமைதி

அ. செயற்கை நுண்ணறிவு (கூடுதல் வினாக்கள்)


1.   உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் _____________

அ) சிந்தனை ஆற்றல்

ஆ) செல்வம்

இ) வாழ்நாள்

ஈ) ஆற்றல்

அ) சிந்தனை ஆற்றல்

 

2.   இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம் _____________

அ) செயற்கை நுண்ணறிவு

ஆ) மென்பொருள்

இ) மீத்திறன் நுண்ணறிவு

ஈ) முகநூல், புலனம் போன்றவை

விடை: அ) செயற்கை நுண்ணறிவு

 

3.   வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் _____________ என்று அழைப்பர்.

அ) எழுத்தாளி

ஆ) எழுத்தாணி

இ) எழுத்தோவியம்

ஈ) குரலாளி

விடை: அ) எழுத்தாளி

 

4.   2016 இல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினியின் பெயர் _____________

அ) வாட்சன்

ஆ) வேர்டுஸ்மித்

இ) ஸ்டீவ்ஸ்மித்

ஈ) பெப்பர்

விடை: அ) வாட்சன்

 

5.   சீன நாட்டில் சூவன்சௌ துறைமுக நகரில் கட்டப்பட்ட கோயில் ___________

அ) சிவன் கோயில்

ஆ) பெருமாள் கோயில்

இ) முருகன் கோயில்

ஈ) புத்தர் கோயில்

விடை: அ) சிவன் கோயில்

 

6.   செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் _____________ தேவை கூடியுள்ளது.

அ) மெய்நிகர் உதவியாளர்களின்

ஆ) தரவு அறிவியலாளர்களின்

இ) உதவியாளர்களின்

ஈ) அறிவியலாளர்களின்

விடை: ஆ) தரவு அறிவியலாளர்களின்

 

7.   ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் _____________

அ) வாட்சன்

ஆ) பெப்பர்

இ) சோபியா

ஈ) வேர்டுஸ்மித்

விடை: ஆ) பெப்பர்

 

8.   உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ _____________

அ) வாட்சன்

ஆ) பெப்பர்

இ) இலா

ஈ) சோபியா

விடை: ஆ) பெப்பர்

 

9.   ‘இலா’ என்ற உரையாடு மென்பொருளை உருவாக்கியது _____________

அ) ஐ.பி.எம். நிறுவனம்

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்

ஈ) சாப்ட் வங்கி

விடை: ஆ) பாரத ஸ்டேட் வங்கி

 

10. 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தியுள்ள நாடு _____________

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

விடை: ஆ) சீனா

 

11. ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன் _____________

அ) வாட்சன்

ஆ) இலா

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

விடை: ஈ) பெப்பர்

 

12. ஸ்மார்ட்போன் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் _____________

அ) திறன் பேசி

ஆ) தொலைபேசி

இ) அலைபேசி

ஈ) செல்பேசி

விடை: அ) திறன் பேசி

 


ஆ. பெருமாள் திருமொழி (கூடுதல் வினாக்கள்)

1.   பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 105        

ஆ) 155         

இ) 205       

ஈ) 255

விடை: ஆ) 105

 

2.   வித்துவக்கோடு என்னும் ஊர், _______ மாநிலத்தில் _______ மாவட்டத்தில் உள்ளது.

அ) கேரள, பாலக்காடு          

ஆ) கர்நாடக, மாண்டியா

இ) ஆந்திரா, நெல்லூர்          

ஈ) கேரள, திருவனந்தபுரம்    

விடை: அ) கேரள, பாலக்காடு

 

3.   வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்.

அ) மோனை  

ஆ) எதுகை  

இ) உருவகம்   

ஈ) அந்தாதி

விடை: எதுகை

 

4.   பெருமாள் திருமொழியைப் பாடியவர் __________

அ) திருமங்கையாழ்வார்

ஆ) குலசேகராழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) பொய்கையாழ்வார்

விடை: ஆ) குலசேகராழ்வார்

 

5.    ‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள் __________

அ) பொய்மை   

ஆ) நிலையாமை  

இ) விளையாட்டு  

ஈ) அற்புதம்

விடை: இ) விளையாட்டு 

 

6.    “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்

அ) வாளால் – மாளாத

ஆ) நோயாளன் – மாயத்தால்

இ) மருத்துவன் – நோயாளன்

ஈ) வாளால் – நோயால்

விடை: இ) மருத்துவன் – நோயாளன்

 

7.   “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”- இவ்வடிகளில் அமைந்த அடிஎதுகைச் சொற்கள் 

அ) வாளால் – மாளாத

ஆ) நோயாளன் – மாயத்தால்

இ) மருத்துவன் – நோயாளன்

ஈ) வாளால் – நோயால்

விடை: அ) வாளால் – மாளாத

 

8.   குலசேகர ஆழ்வாரின் __________ நூற்றாண்டு.

அ) ஆறாம்

ஆ) ஏழாம்

இ) எட்டாம்

ஈ) பத்தாம்

விடை: இ) எட்டாம்

     

9.    “நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் __________

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்கள்

ஈ) மருத்துவர்

விடை: அ) குலசேகராழ்வார்

 

10.  வாளால் அறுத்துச் சுடுபவர் __________

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்கள்

ஈ) மருத்துவர்

விடை: ஈ) மருத்துவர்

 

11.  மாயத்தால் மீளாத் துயர் தருபவர் ____________

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்கள்

ஈ) மருத்துவர்

விடை: ஆ) வித்துவக்கோட்டு இறைவன்


DOWNLOAD- பதிவிறக்கு

இ. பரிபாடல்  (கூடுதல் வினாக்கள்)

1.   ‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர் ____________

அ) நக்கீரர்

ஆ) மருதனார்

இ) கீரந்தையார்

ஈ) ஓதலாந்தையார்

விடை: இ) கீரந்தையார்

 

2.   சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் ____________

அ) நற்றிணை

ஆ) முல்லைப்பாட்டு

இ) பட்டினப் பாலை

ஈ) பரிபாடல்

விடை: ஈ) பரிபாடல்

 

3.   எட்வின் ஹப்பிள் என்பவர் ____________

அ) அமெரிக்க மருத்துவர்

ஆ) பிரெஞ்சு ஆளுநர்

இ) அமெரிக்க வானியல் அறிஞர்

ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி

விடை: இ) அமெரிக்க வானியல் அறிஞர்

 

4.   “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?

அ) பரிபாடல்

ஆ) கலித்தொகை

இ) பெருமாள் திருமொழி

ஈ) திருவாசகம்

விடை: ஈ) திருவாசகம்

 

5.   “கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?

அ) எதுகை

ஆ) மோனை

இ) இயைபு

ஈ) அந்தாதி

விடை: அ) எதுகை

 

6.   பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ____________

அ) நெருப்புப் பந்து

ஆ) உருவம் இல்லாத காற்று

இ) வெள்ளம்

ஈ) ஊழி

விடை: அ) நெருப்புப் பந்து

 

7.   நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ____________

அ) பூமி

ஆ) காற்று

இ) கடல்

ஈ) நீர்

விடை: அ) பூமி

 

8.   “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள் ____________

அ) வானம்

ஆ) காற்று

இ) யுகம்

ஈ) முறை

விடை: அ) வானம்

 

9.   “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின் பொருள் ____________

அ) வானம்

ஆ) காற்று

இ) யுகம்

ஈ) முறை

விடை: ஈ) முறை

 

10. “தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ____________

அ) தண்பெயல்

ஆ) தலை

இ) இய

ஈ) ஊழி

விடை: அ) தண்பெயல்

 

11. 1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ____________

அ) மாணிக்கவாசகர்

ஆ) கீரந்தையார்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) கபிலர்

விடை: அ) மாணிக்கவாசகர்

ஈ) விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

(கூடுதல் வினாக்கள்)

1.   இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை ____________ அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.

அ) புவியியல்

ஆ) கணிதவியல்

இ) புள்ளியியல்

ஈ) வானியல்

விடை: ஆ) கணிதவியல்

 

2.   இப்புவியின் படைப்பில் கடவுள் என்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் ____________

அ) ஏற்றுக் கொண்டார்

ஆ) ஆய்வுக்கு உட்பட்டது என்றார்

இ) மறுத்தார்

ஈ) உலகம் முழுவதும் பரப்பினார்

விடை: இ) மறுத்தார்

 

3.   கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர் ____________

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஆ) ஜான் வீலர்

இ) வேர்டுஸ்மித்

ஈ) வாட்சன்

விடை: அ) ஸ்டீபன் ஹாக்கிங்

 

4.   கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தவர் ____________

அ) நியூட்டன்

ஆ) ஹெலன் கெல்லர்

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஈ) கிரிகோர் மெண்டல்

விடை: இ) ஸ்டீபன் ஹாக்கிங்

 

5.   “திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்பதில் குறிப்பிடப்படும் மாவட்டம்

அ) கரூர்

ஆ) பெரம்பலூர்

இ) தஞ்சாவூர்

ஈ) திருச்சி

விடை: அ) கரூர்

 

6.   “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை

திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்று குறிப்பிடும் நூல்?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) பரிபாடல்

விடை: அ) அகநானூறு

இலக்கணம் – பொது (கூடுதல் வினாகள்)

1.   ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது ____________ வழு.

அ) விடை

ஆ) வினா

இ) மரபு

ஈ) கால

விடை: ஆ) வினா

 

2.   கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று கூறுவது ____________ வழு.

அ) பால்

ஆ) வினா

இ) விடை

ஈ) மரபு

விடை: இ) விடை

 

3.   மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ____________

அ) பால் வழுவமைதி

ஆ) திணை வழுவமைதி

இ) இட வழுவமைதி

ஈ) மரபு வழுவமைதி

விடை: இ) இட வழுவமைதி

 

4.   என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது –

அ) பால் வழுவமைதி

ஆ) திணை வழுவமைதி

இ) இட வழுவமைதி

ஈ) மரபு வழுவமைதி

விடை: ஆ) திணை வழுவமைதி

 

5.   வாடா இராசா, வாடா கண்ணா என மகளைத் தாய் அழைப்பது. –

அ) பால் வழுவமைதி

ஆ) இடவழுவமைதி

இ) திணை வழுவமைதி

ஈ) மரபு வழுதிணை

விடை: அ) பால் வழுவமைதி

 

6.   தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ________

அ) பால் வழு

ஆ) மரபு வழுதிணை

இ) விடை வழு

ஈ) மரபு வழு

விடை: ஈ) மரபு வழு

 

7.   அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார். ____________ வழுவமைதி.

அ) பால் வழுவமைதி

ஆ) மரபு வழுவமைதி

இ) கால வழுவமைதி

ஈ) மரபு வழுவமைதி

விடை: இ) கால வழுவமைதி

 

8.   கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும். ____________ வழுவமைதி

அ) பால் வழுவமைதி

ஆ) மரபு வழுவமைதி

இ) கால வழுவமைதி

ஈ) மரபு வழுவமைதி

விடை: ஈ) மரபு வழுவ.மைதி

10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்

  1 0 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண் வகுப்பு 10 -தமிழ்  அலகு 2   வினா -ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு 1.       உனக்குப் பாட்டுகள் ...