10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்
வகுப்பு 10 -தமிழ்
அலகு 2
வினா -ஒரு மதிப்பெண்
பலவுள் தெரிவு
1.
உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப்
புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில்
இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
ஆ) மோனை, எதுகை
இ) முரண், இயைபு
ஈ)
உவமை, எதுகை
விடை: மோனை, எதுகை
2.
செய்தி
1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று
நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி
2: காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி
3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம்
செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ)
செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ)
செய்தி 1, 3 ஆகியன சரி
விடை: ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
3.
‘பாடுஇமிழ் பனிக்கடல்
பருகி’
என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல்
செய்தி யாது?
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ) கடல்நீர் குளிர்ச்சி
அடைதல்
இ) கடல்நீர் ஒலித்தல்
ஈ)
கடல்நீர் கொந்தளித்தல்
விடை: அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
4.
‘பெரிய மீசை’ சிரித்தார்
– வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை: அ) பண்புத்தொகை
5.
பொருந்தும்
விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் – 1. மேற்கு
ஆ)
கோடை – 2. தெற்கு
இ)
வாடை –
3. கிழக்கு
ஈ) தென்றல்
– 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
விடை: ஆ) 3, 1, 4, 2