மொத்தப் பக்கக்காட்சிகள்

10-tamil இயல்-3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10-tamil இயல்-3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

 

10 வகுப்பு -தமிழ் அலகு 3 வினா -ஒரு மதிப்பெண்

வகுப்பு 10 -தமிழ் 

அலகு 3

 வினா -ஒரு மதிப்பெண்

பலவுள் தெரிவு

பலவுள் தெரிக.  (பாடநூல் வினாக்கள்)

1.   பின்வருவனவற்றுள் முறையான தொடர்.

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.   

விடை: இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

 

2.   “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது ____________

அ) புத்தூர்  

ஆ) மூதூர்   

இ) பேரூர்   

ஈ) சிற்றூர்                            

விடை: ஈ) சிற்றூர்

 

3.   அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது _____________

அ) வேற்றுமை உருபு 

ஆ) எழுவாய் 

இ) உவம உருபு 

ஈ) உரிச்சொல்                        

விடை: வேற்றுமை உருபு

                                      

4.   காசிக்காண்டம் என்பது _____________

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல் 

விடை: இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

 

5.   விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.

அ) நிலத்திற்கேற்ற விருந்து    

ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து        

ஈ) உற்றாரின் விருந்து                

விடை: ஆ) இன்மையிலும் விருந்து

விருந்து போற்றுதும்! கூடுதல் – ஒரு மதிப்பெண்

 

1.   “விருந்தே புதுமை” என்று கூறியவர் _________

அ) ஔவையார்  

ஆ) தொல்காப்பியர்   

இ) கம்பர்  

ஈ) திருவள்ளுவர்

விடை: ஆ) தொல்காப்பியர்  

 

2.   “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல் ___________

அ) குறுந்தொகை  

ஆ) அகநானூறு  

இ) நற்றிணை  

ஈ) புறநானூறு

விடை: இ) நற்றிணை 

 

3.   “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

அ) கம்பராமாயணம்        

ஆ) கலிங்கத்துப்பரணி

இ) முக்கூடற்பள்ளு         

ஈ) பெரியபுராணம்

விடை: ஆ) கலிங்கத்துப்பரணி

 

4.   ‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்

அ) சிறுபாணாற்றுப்படை            

ஆ) பெரும்பாணாற்றுப்படை

இ) பொருநராற்றுப்படை             

ஈ) கூத்தராற்றுப்படை

விடை: ஆ) பெரும்பாணாற்றுப்படை

 

5.   மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?

அ) அமெரிக்கா

ஆ) இலங்கை

இ) மொரிசியஸ்

ஈ) மலேசியா

விடை: அ) அமெரிக்கா

 

6.    தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?

அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்

இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்

ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

விடை: அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

 

7.   “………தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” – என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?

அ) கம்பராமாயணம், சீதை

ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி

இ) நளவெண்பா , தமயந்தி

ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை

விடை: ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி

 

8.   நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?

அ) குழல் மீன் கறியும் பிறவும்       

ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்

இ) உப்பும் முத்தும்                   

ஈ) மீன் கறியும் நண்டும்

விடை: அ) குழல் மீன் கறியும் பிறவும்       

 

9.   மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?

அ) ஔவையார், ஆத்திச்சூடி            

ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்   

ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்

விடை: ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

 

10. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?

அ) நற்றிணை   

ஆ) குறுந்தொகை  

இ) பதிற்றுப்பத்து  

ஈ) பரிபாடல்

விடை: ஆ) குறுந்தொகை  

 

11. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர் ___________

ஆ) தொல்காப்பியர்   

இ) கம்பர்  

ஈ) திருவள்ளுவர்

விடை: அ) ஔவையார்  

 

12. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா ___________

அ) வாழையிலை விருந்து விழா   

ஆ) இறைச்சி உணவு விருந்து விழா

இ) வேட்டி சேலை உடுத்தும் விழா 

ஈ) நவதானிய விழா

விடை: அ) வாழையிலை விருந்து விழா   

 

13. திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல் ___________

அ) இல்லறவியல்  

ஆ) பாயிரவியல்  

இ) அரசியல்  

ஈ) துறவறவியல்

விடை: அ) இல்லறவியல்  

 

14. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?

அ) கம்பராமாயணம்

ஆ) பெரிய புராணம்

இ) சிலப்பதிகாரம்

ஈ) மணிமேகலை

விடை: அ) கம்பராமாயணம்

 

15.     கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர் ___________

அ) கம்பர்

ஆ) தொல்காப்பியர் 

இ) இளங்கோவடிகள் 

ஈ) செயங்கொண்டார்

    விடை: அ) கம்பர்

 

    16.     இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக்                         குறிப்பிடும் நூல்?

அ) பொருநராற்றுப் படை       

ஆ) நற்றிணை

இ) பெரிய புராணம்            

ஈ) கம்பராமாயணம்

    விடை: இ) பெரிய புராணம்            

 

17.  “காலின் ஏழடிப் பின் சென்று”– என்னும் பொருநராற்றுப்படை                    உண ர்த்தும் செய்தி ___________

அ) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்

இ) எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.

ஈ) ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.

விடை: ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

 

10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்

  1 0 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண் வகுப்பு 10 -தமிழ்  அலகு 2   வினா -ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு 1.       உனக்குப் பாட்டுகள் ...