மொத்தப் பக்கக்காட்சிகள்

வினா -ஒரு மதிப்பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினா -ஒரு மதிப்பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்

 

10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்

வகுப்பு 10 -தமிழ் 

அலகு 2

 வினா -ஒரு மதிப்பெண்

பலவுள் தெரிவு


1.      உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”  – பாரதியின்  இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம், எதுகை                  

ஆ) மோனை, எதுகை

இ) முரண், இயைபு                       

  ஈ) உவமை, எதுகை             

விடை: மோனை, எதுகை

2.      செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2: காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

அ) செய்தி 1 மட்டும் சரி             

ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி            

ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

விடை: ஈ) செய்தி 1, 3  ஆகியன சரி

3.      ‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்                 

ஆ) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல்நீர் ஒலித்தல்                                                  

ஈ) கடல்நீர் கொந்தளித்தல்        

விடை: அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

4.      ‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை                      

ஆ) உவமைத்தொகை

இ) அன்மொழித்தொகை         

ஈ) உம்மைத்தொகை          

விடை: அ) பண்புத்தொகை    

5.      பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்     – 1. மேற்கு

ஆ) கோடை            – 2. தெற்கு

இ) வாடை              – 3. கிழக்கு

ஈ) தென்றல்          – 4. வடக்கு

அ) 1, 2, 3, 4               

ஆ) 3, 1, 4, 2      

இ) 4, 3, 2, 1       

ஈ) 3, 4, 1, 2       

விடை: ஆ) 3, 1, 4, 2

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

10 வகுப்பு -தமிழ் அலகு 1 வினா -ஒரு மதிப்பெண்

1 0 குப்பு -தமிழ் 

அலகு 1
 வினா -ஒரு மதிப்பெண்

பலவுள் தெரிவு

1.   மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

விடை: வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

2.   காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல

உரங்கள் - இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

அ)  இலையும் சருகும்     ஆ)  தோகையும் சண்டும்

இ)  தாளும் ஓலையும்     ஈ) சருகும் சண்டும்  

விடை: சருகும் சண்டும்

3.   எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்_______

அ) எந் + தமிழ் + நா          ஆ) எந்த + தமிழ் + நா

இ) எம் + தமிழ் + நா         ஈ) எந்தம் + தமிழ் + நா  

விடை: எம் + தமிழ் + நா

4.   “கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது” – தொடரில் இடம்

பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

அ) பாடிய  கேட்டவர்        ஆ) பாடல்  பாடிய

இ) கேட்டவர் பாடிய           ஈ) பாடல் கேட்டவர்     

விடை: பாடல், கேட்டவர்

5.   வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிறு வகை _______

அ) குலை வகை     ஆ) மணி வகை       இ) கொழுந்து வகை  ஈ) இலைவகை    

விடை: மணி வகை

கூடுதல் வினாக்கள்

1.   உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?

அ) தேன்சிட்டு   ஆ) தேனீ    இ) வண்டு   ஈ) வண்ணத்துப்பூச்சி   

விடை: இ) வண்டு

2.   “மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?

அ) ஐந்து    ஆ) மூன்று      இ) இரண்டு    ஈ) எட்டு 

விடை: ஆ) மூன்று  

  

3.   ‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல் _______

அ) நூறாசிரியம்             ஆ) கனிச்சாறு    

இ) எண்சுவை எண்பது       ஈ) பாவியக்கொத்து

விடை: ஆ) கனிச்சாறு

4.   ‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.

அ) பாடல் பத்து, எண் தொகை      ஆ) பா பத்து, எட்டுத் தொகை

இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை     ஈ) பத்தும் எட்டும்       

விடை: இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

5.   “அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர் _________  

அ) சேரன்     ஆ) சோழன்     இ) பாண்டியன்   ஈ) பல்லவன்

விடை: இ) பாண்டியன்

6.   1.   காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள் - இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

அ) இலையும் சருகும்             ஆ) தோகையும் சண்டும்

இ) தாளும் ஓலையும்              ஈ) சருகும் சண்டும்

விடை: ஈ) சருகும் சண்டும்

7.   மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?

அ) அரும்பு       ஆ) மலர்           இ) வீ       ஈ) செம்மல் 

விடை: இ) வீ

8.   திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?     

அ) பாவாணர்                                  ஆ) கால்டுவெல்   

இ) இரா. இளங்குமரனார்            ஈ) திரு.வி.க


விடை: ஆ) கால்டுவெல்

9.   நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர் யார்?   

அ) பாவாணர்                             ஆ) பாரதியார்                                                        இ) இரா. இளங்குமரனார்         ஈ) திரு.வி.க 

விடை: ஆ) பாரதியார்

10.  உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

அ) மலேசியா   ஆ) சிங்கப்பூர்      இ) இந்தியா    ஈ) கனடா

விடை: அ) மலேசியா

11.  திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது? 

அ) அல்லூர்    ஆ) திருவள்ளூர்     இ) கல்லூர்    ஈ) நெல்லூர்   

விடை: அ) அல்லூர்

12.  குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது?

   அ) போத்து    ஆ) குச்சி    இ) இணுக்கு      ஈ) சினை

விடை: இ) இணுக்கு

13.  பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.    

அ) முன்னை முகிழ்ந்த                  ஆ) முன்னைக்கும் முன்னை

   இ) முன்னும் நினைவால்               ஈ) முந்துற்றோம் யாண்டும்

விடை: ஆ) முன்னைக்கும் முன்னை

14.  செந்தமிழ் – பிரித்து எழுதுக.

அ) செந் + தமிழ்           ஆ) செம் + தமிழ்     

இ) செ + தமிழ்         ஈ) செம்மை + தமிழ்    

விடை: ஈ) செம்மை + தமிழ்

15.  பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?


அ) தேவநேயப் பாவாணர்           ஆ) இளங்குமரனார்

இ) திரு.வி.க                                       ஈ) மறைமலையடிகள்   

விடை: ஆ) இளங்குமரனார்

16.  ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?


அ) க.அப்பாத்துரையார்              ஆ) தேவநேயப் பாவாணர்


இ) இளங்குமரனார்                 ஈ) ஜி.யு.போப்     

விடை: அ) க.அப்பாத்துரையார்

17.   “மொழிஞாயிறு” என்றழைக்கப்படுவர் யார்?

அ) க.அப்பாத்துரையார்              ஆ) இளங்குமரனார்
இ) தேவநேயப் பாவாணர்           ஈ) ஜி.யு.போப்

விடை: இ) தேவநேயப் பாவாணர்

18.   துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

அ) பெருஞ்சித்திரனார்        ஆ) க.அப்பாத்துரையார்          

இ) தேவநேயப் பாவாணர்     ஈ) தமிழண்ணல்

விடை: அ) பெருஞ்சித்திரனார்

19.   “சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
அ) பாரதிதாசன்              ஆ) பெருஞ்சித்திரனார்   
இ) சச்சிதானந்தன்           ஈ) ஆறுமுகநாவலர்

விடை: இ) சச்சிதானந்தன்

20.   கொழுந்தாடை என்பது யாது?

அ) நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து    

ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து

இ) தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

ஈ) கரும்பின் நுனிப்பகுதி  

விடை: ஈ) கரும்பின் நுனிப்பகுதி

21.   “கருக்கல்” என்ற சொல் குறிப்பது _______

அ) இளம் பாக்கு    
ஆ) பலாப்பிஞ்சு   
இ) இளநெல்   
ஈ) எள்பிஞ்சு

விடை: இ) இளநெல்   

22.   தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்?


அ) க.அப்பாத்துரையார்            
ஆ) இளங்குமரனார்
இ) தேவநேயப் பாவாணர்         
ஈ) திரு.வி.க

விடை: ஈ) திரு.வி.க

23.   தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
அ) கண்ண தாசன் 
ஆ) பாரதிதாசன் 
இ) பெருஞ்சித்திரனார் 
ஈ) திரு.வி.க    

விடை: இ) பெருஞ்சித்திரனார்

24.   “நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?

அ) 18  

ஆ) 10    

இ) 8    

ஈ) 5      

விடை: அ) 18    

25.   ‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.

அ) பாடல் பத்து, எண் தொகை       

ஆ) பா பத்து, எட்டுத் தொகை

இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை      

ஈ) பத்தும் எட்டும்  

   

விடை: இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை 

26.   கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
        அ) மணல்     
        ஆ) சங்கு
        இ) கப்பல்
        ஈ) மீனவர்கள்  

             விடை: ஆ) சங்கு

27.   செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப்                     பணியாற்றியவர் யார்?
        அ) தேவநேயப் பாவாணர்
        ஆ) வெள்ளைவாரணார்
        இ) இளங்குமரனார்
        ஈ) பெருந்தேவனார்
        விடை: அ) தேவநேயப் பாவாணர்
 
28.   இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் _______
        அ) தமிழழகனார்
        ஆ) அப்பாத்துரையார்
        இ) தேவநேயப் பாவாணர்
        ஈ) இரா.இளங்குமரனார்
        விடை: ஈ) இரா.இளங்குமரனார்
 
29.   சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர்         என்ன?
     அ) சண்முகமணி
    ஆ) சண்முகசுந்தரம்
    இ) ஞானசுந்தரம்
    ஈ) ஆறுமுகம்
    விடை: ஆ) சண்முகசுந்தரம்
 
31.   கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
        அ) இரண்டு
        ஆ) மூன்று
        இ) நான்கு
        ஈ) ஐந்து
        விடை: ஆ) மூன்று
 
32.   உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
        அ) இரண்டு
        ஆ) மூன்று
        இ) ஐந்து
        ஈ) ஆறு
        விடை: ஆ) மூன்று
 
33.   சார்பெழுத்துகளின் எண்ணிக்கை ___________
        அ) முப்பது
        ஆ) பன்னிரண்டு
        இ) பத்து
        ஈ) ஒன்பது
        விடை: இ) பத்து
 
34.   உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
        அ) இரண்டு
        ஆ) மூன்று
        இ) ஐந்து
        ஈ) ஆறு
        விடை: ஆ) மூன்று
 
35.   ‘நசைஇ’ என்பதன் பொருள் ___________
        அ) விருப்பம்
        ஆ) விரும்பி
        இ) துன்பம்
        ஈ) கவனித்து
        விடை: ஆ) விரும்பி
 
36.   ‘அந்தமான்’ என்பது எவ்வகை மொழி?
அ) தொடர் மொழி 
ஆ) தனி மொழி   
இ) பொது மொழி  
ஈ) எதுவுமில்லை
விடை: இ) பொது மொழி
 
37.  அளபெடுத்தல் என்பதன் பொருள்
அ) நீண்டு ஒலித்தல்
ஆ) குறுகி ஒலித்தல்
இ) அளவாக ஒலித்தல்
ஈ) ஒலித்தல் இல்லை
விடை: அ) நீண்டு ஒலித்தல்
 
38.  தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
அ) தொழிற்பெயர்
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) வினையாலணையும் பெயர்
விடை: ஈ) வினையாலணையும் பெயர்

10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்

  1 0 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண் வகுப்பு 10 -தமிழ்  அலகு 2   வினா -ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு 1.       உனக்குப் பாட்டுகள் ...