10 வகுப்பு -தமிழ் அலகு 2 வினா -ஒரு மதிப்பெண்
வகுப்பு 10 -தமிழ்
அலகு 2
வினா -ஒரு மதிப்பெண்
பலவுள் தெரிவு
1.
உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப்
புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில்
இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
ஆ) மோனை, எதுகை
இ) முரண், இயைபு
ஈ)
உவமை, எதுகை
விடை: மோனை, எதுகை
2.
செய்தி
1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று
நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி
2: காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி
3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம்
செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ)
செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ)
செய்தி 1, 3 ஆகியன சரி
விடை: ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
3.
‘பாடுஇமிழ் பனிக்கடல்
பருகி’
என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல்
செய்தி யாது?
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ) கடல்நீர் குளிர்ச்சி
அடைதல்
இ) கடல்நீர் ஒலித்தல்
ஈ)
கடல்நீர் கொந்தளித்தல்
விடை: அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
4.
‘பெரிய மீசை’ சிரித்தார்
– வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை: அ) பண்புத்தொகை
5.
பொருந்தும்
விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் – 1. மேற்கு
ஆ)
கோடை – 2. தெற்கு
இ)
வாடை –
3. கிழக்கு
ஈ) தென்றல்
– 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
விடை: ஆ) 3, 1, 4, 2
கூடுதல் வினாக்கள்
இயல்- 2 கேட்கிறதா என் குரல்!
(உரைநடை உலகம்)
1.
தாய்லாந்து
மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்?
அ) திருமந்திரம், திருவாசகம்
ஆ) திருக்குறள், திருமந்திரம்
இ) திருவருட்பா, திருப்பாவை
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
விடை: ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
2.
“வாயு
வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
அ) திருமூலர்
ஆ) பிற்கால ஔவையார்
இ) தொல்காப்பியர்
ஈ) ஔவையார்
விடை: ஆ) பிற்கால ஒளவையார்
3.
‘வளிமிகின்
வலி இல்லை’ என்று பாடியவர் யார்?
அ)
ஐயூர் முடவனார்
ஆ)
ஔவையார்
இ)
இளங்கோவடிகள்
ஈ)
இளநாகனார்
விடை: அ) ஐயூர் முடவனார்
4.
‘முந்நீர்’
என்பதன் பொருள்
அ) கடல்
ஆ) கப்பல்
இ) பயணம்
ஈ) நீர்
விடை: அ) கடல்
5.
“வண்டொடு
புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
அ) தென்றல் விடு தூது
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) புறநானூறு
விடை: ஆ) சிலப்பதிகாரம்
6.
“வளிதொழில்
ஆண்ட உரவோன்” – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
அ)
கரிகாலன்
ஆ)
இராசராசன்
இ)
இராசேந்திரன்
ஈ)
பாழி
விடை: அ) கரிகாலன்
7.
“பூங்காற்றே!
இத்தனை நாள் உனைப் பாடாதிருந்துவிட்டேன்” என்று வருந்திய கவிஞர்
அ)
தனிநாயக அடிகள்
ஆ)
தேவகோட்டை வா.மூர்த்தி
இ)
இளங்குமரனார்
ஈ)
பாரதியார்
விடை: ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி
8.
மூச்சுப்பயிற்சியே
உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?
அ)
மாணிக்கவாசகர், திருவாசகம்
ஆ)
திருமூலர், திருமந்திரம்
இ)
திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ)
ஔவையார், ஆத்திச்சூடி
விடை: ஆ) திருமூலர், திருமந்திரம்
9.
“வண்டொடு
புக்க மணவாய்த் தென்றல்” – என்று உரைத்தவர் யார்?
அ)
ஔவையார்
ஆ)
இளங்கோவடிகள்
இ)
பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ)
குமரகுருபரர்
விடை: ஆ) இளங்கோவடிகள்
10. ‘நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ – என்று பெண்ணொருத்தி, தூது செல்ல காற்றினை அழைத்ததாகப்
பாடியவர்
அ)
ஔவையார்
ஆ)
இளங்கோவடிகள்
இ)
பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ)
குமரகுருபரர்
விடை: இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
11. “நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த
இளந்தென்றலே” – என்ற பாடலை இயற்றியவர்
அ)
வாலி
ஆ)
கண்ணதாசன்
இ)
வைரமுத்து
ஈ)
மீரா
விடை: ஆ) கண்ண தாசன்
12. ‘கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது’
என்று கூறியவர் யார்?
அ)
ஐயூர் முடவனார்
ஆ)
ஒளவையார்
இ)
நல்லந்துவனார்
ஈ)
மதுரை இளநாகனார்
விடை: ஈ) மதுரை இளநாகனார்
13. துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய
வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி
அ)
ஹிப்பாலஸ்
ஆ)
யுவான்சுவாங்க்
இ)
பிளைனி
ஈ)
தாலமி
விடை: அ) ஹிப்பாலஸ்
14. ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ)
வடகிழக்குப் பருவக் காற்று
ஆ)
தென்மேற்குப் பருவக் காற்று
இ)
வடமேற்குப் பருவக் காற்று
ஈ)
தென்கிழக்குப் பருவக் காற்று
விடை: ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
15. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ)
வடகிழக்குப் பருவக் காற்று
ஆ)
தென்மேற்குப் பருவக் காற்று
இ)
வடமேற்குப் பருவக் காற்று
ஈ)
தென்கிழக்குப் பருவக் காற்று
விடை: அ) வடகிழக்குப் பருவக் காற்று
16. உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம்
பெற்றுள்ள நாடு
அ)
இந்தியா
ஆ)
அமெரிக்கா
இ)
சீனா
ஈ)
ஜப்பான்
விடை: அ) இந்தியா
17. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம்
வகிக்கும் மாநிலம்
அ)
குஜராத்
ஆ)
கேரளா
இ)
தமிழ்நாடு
ஈ)
ஆந்திரா
விடை: இ) தமிழ்நாடு
18. உலகக் காற்று நாள்
அ)
ஜூன் 15
ஆ)
ஜூலை 15
இ)
ஜனவரி 15
ஈ)
டிசம்பர் 10
விடை: அ) ஜூன் 15
19. தொல்காப்பியர், உலகம் என்பது எதனால் ஆனது என்கிறார்?
அ)
கடவுளால்
ஆ)
மனிதனால்
இ)
ஐம்பெரும் பூதங்களால்
ஈ)
இன்பதுன்பங்களால்
விடை: இ) ஐம்பெரும் பூதங்களால்
20. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை
நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?
அ)
மாணிக்கவாசகர், திருவாசகம்
ஆ)
திருமூலர், திருமந்திரம்
இ)
திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ)
ஔவையார், ஆத்திச்சூடி
விடை: ஆ) திருமூலர், திருமந்திரம்
21. பருவக் காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்திற்கு
நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தவர்
அ)
வாஸ்கோடகாமா
ஆ)
ஹிப்பாலஸ்
இ)
பார்த்தலோமியோ டயஸ்
ஈ)
டெமாஸ்தனிஸ்
விடை: ஆ) ஹிப்பாலஸ்
22. ‘களிஇயல் யானைக் கரிகால் வளவ!’ என்று பாடியவர்
அ)
காக்கைப் பாடினியார்
ஆ)
வெண்ணிக்குயத்தியார்
இ)
வெள்ளிவீதியார்
ஈ)
நப்பசலையார்
விடை: ஆ) வெண்ணிக்குயத்தியார்
23. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை,
திருப்பாவை பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளவர்
அ) மறைமலையடிகள்
ஆ) தனிநாயக அடிகள்
இ) ஞானியாரடிகள்
ஈ) அமுதன் அடிகள்
விடை: ஆ) தனிநாயக அடிகள்
24. புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண்
அ)
ஓசோன் படலம்
ஆ)
எரிகற்கள்
இ)
விடிவெள்ளி
ஈ)
காடு
விடை: அ) ஓசோன் படலம்
25. கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை
மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் பெய்வது
அ)
அமில மழை
ஆ)
கல் மழை
இ)
கன மழை
ஈ)
மிதமான மழை
விடை: அ) அமில மழை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக